‘தாய்ப்பால்’ என்னும் அருமருந்து!- ‘உலக தாய்ப்பால் வாரம்’ சிறப்பு பகிர்வு
உலகின் ஆதி உணவு, தாய்ப்பால்தான். எப்போதும் அதற்கு ஈடான உணவு என்று எதுவும் இல்லை. உயிர் வாழும் கடைசி மணித்துளிகள் வரையிலான ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது, பிறந்த சில நொடிகளில் குழந்தை பருகும் தாய்ப்பால்தான். வானளவு மகத்துவம் கொண்ட தாய்ப்பாலையும், அன்னையரையும் போற்றும் வகையில், ஆகஸ்ட் முதல் வாரம் ‘உலக தாய்ப்பால் வாரம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் குறித்த சந்தேகங்களைத் மனதில் தேக்கி வைத்திருக்கும் அன்னையரும், எதிர்காலத்தில் தாய் என்ற நிகரற்ற பொறுப்பேற்கவுள்ள இளம் பெண்களும் அறிந்துகொள்ள, தாய்ப்பால் குறித்த சிறப்புக் குறிப்புகள் இங்கே..! கு ழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். கு றைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா சபையின் குழந்தைகள் நல கூட்டமைப்பின் ஆய்வு முடிவுகளின்படி, தாயின் பால்சுரப்பினைப் பொருத்து குழந்தைக்கு 3 வயது வரையில் தாய்ப்பால் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீம்பால் தொடங்கி 3 வயது வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவார்கள். மு தல் ஆறு மாதத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு, தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. அதன் பிறகு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். பி றந்த குழந்தைக்கு, பசுவின் பாலோ பவுடர் பாலோ தாய்ப்பாலுக்கு இணையான சத்தைக் கொடுக்கக்கூடியது அல்ல என்பதுடன், அளவு, இடைவெளி என கொடுக்கப்படும் முறைகளால் அது சிசுவுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும் இயற்கை உணவு. கு ழந்தையின் புத்திக்கூர்மை, மூளைச் செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக தாய்ப்பால் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனமான WHO உரக்கச் சொல்கிறது. மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள். கு ழந்தையின் அழுகை, சிரிப்பு, ஸ்பரிசம் என இவையெல்லாம்தான் தாய்க்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தும். இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் அற்புத பந்தம். பா லூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர்வரை அருந்த வேண்டியது அவசியம். சத்தான, சரிவிகித உணவினை வேளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். தா ய்ப்பால் சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கு செய்யும் நன்மைகள் பல. பாலூட்டுவதன் மூலம் அந்தத் தாய்க்கு பிரசவத்துக்குப் பிறகான உடல் எடை குறைப்பு இயற்கையாக நிகழும். கருத்தரித்தல் தவிர்க்கப்படும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மிக முக்கியமாக, பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன. ஆகவே, அன்பான அம்மாக்களே, எதிர்கால அம்மாக்களே... அழகு போய்விடுமோ என்ற தவறான எண்ணத்தால், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் முதல் உணவான, முக்கிய உணவான, இணையற்ற உணவான தாய்ப்பாலை கொடுக்கத் தவறிவிடாதீர்கள். தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே, பெண்களிடம் தாய்ப்பால் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான். வளமான சந்ததியை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம்! - பா.விஜயலட்சுமி
- UK & Europe
- United States
- Meet Sadhguru
- Sadhguru Radio
- Sadhguru Quotes
- Youth N Truth
- Beginner's Programs
- Free Yoga & Guided meditation
- Inner Engineering
- Isha Health Solutions
- See all beginner programs
- Advanced Programs
- Bhava Spandana
- Shoonya Meditation
- Additional Programs
- Sadhanapada
- Sacred Walks
- See all additional programs
- Children's Programs
- Become a Teacher
- Sadhana Support
- Monthly Events
- Free Yoga Day
- Pancha Bhuta Kriya
- Online Satsang
- Annual Events
- Lunar/Hindu New Year
- Guru Purnima
- Mahashivratri
- International Yoga Day
- Mahalaya Amavasya
- Special Events
- Ishanga 7% - Partnership with Sadhguru
- Yantra Ceremony With Sadhguru
- Sadhguru Sannidhi Sangha
- Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
- Ecstasy of Enlightenment with Sadhguru
Main Centers
- Isha Yoga Center
- Sadhguru Sannidhi Bengaluru
- Sadhguru Sannidhi, Chattarpur
- Isha Institute of Inner-sciences
- Isha Yoga Center LA, California, USA
- Local Centers
International Centers
- Consecrated Spaces
- Adiyogi - The Source of Yoga
- Adiyogi Alayam
- Dhyanalinga
- Linga Bhairavi
- Spanda Hall
- Theerthakunds
- Adiyogi - The Abode of Yoga
- Mahima Hall
- Online Medical Consultation
- In-Person Medical Consultation
- Ayurvedic Therapies
- Other Therapies
- Residential Programs
- Diabetes Management Program
- Joint and Musculoskeletal Disorders Program
- Sunetra Eye Care
- Ayur Sampoorna
- Ayur Rasayana Intensive
- Ayur Rasayana
- Pancha Karma
- Yoga Chikitsa
- Ayur Sanjeevini
- Non-Residential Programs
- Obesity Treatment Program
- ADHD/Autism Clinic
- Cancer Clinic
- Conscious Planet
தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்? (Breastfeeding in Tamil)
தாய்ப்பால் கொடுப்பதால் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள், தேவையான அளவு பால் சுரக்க குறிப்புகள், வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கான குறிப்புகள் என தாய்ப்பால் தொடர்பான பல்வேறு அம்சங்களை விளக்குகிறது இக்கட்டுரை.
உள்ளடக்கம்:
- தாய்ப்பால் துளிகள்!
- தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளில் சில
- தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கு உண்டாகும் நன்மைகளில் சில
இயற்கை தந்த அமுதம்!
பிறந்த குழந்தைக்கு அத்தியாவசிய தேவை இரண்டு....
- தாய் எனும் அற்புத உயிர்
குழந்தையைக் குழப்பாதீர்!
- தாய்ப்பால் அதிகரிக்க
சாதாரண உடல் உபாதைகளின்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?
வேலைக்கு செல்லும் மகளிருக்கான உபாயம், ஆறு மாத காலத்திற்கு பின், கருவில் பிள்ளை சுமை... மனதில் தொல்லை சுமை... இன்றைய தாய்மை, ஈஷா தாய்மை வகுப்புகள் - வழிகாட்டியும், கைத்துணையும், தாய்சேய் நலத்திற்காக சித்த மூலிகை மருத்துவம்.
டாக்டர். சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:
தாய்ப்பால் மகத்துவமா? இது நம்ம சப்ஜெக்ட் இல்லப்பா!” என அடுத்த பக்கத்துக்குப் பயணிக்கும் ஆண்களுக்கு ஒரு கேள்வி...
“ஒரு பெண் மூலமாய் பிறந்து, ஏதுமறியா பச்சிளங்குழந்தையாய் நீங்கள் தவழ்ந்தபோது அவள் மாரில் புகட்டிய பால் மூலம் உயிர் வளர்த்தீர்களா?”
‘ஆம்’ எனில் அவசியம் தொடரவும். இது உங்களுக்கும்தான்.
உயிரூட்டும் தாய்ப்பால் பற்றிய சில அடிப்படை தகவல்கள் மற்றும் தாய்ப்பால் புகட்டுவதன் முக்கியத்துவம் அனைவருக்கும் சென்றடைய உலக சுகாதார இயக்கம், பிரதி வருடம் ஆகஸ்ட் முதல் வாரத்தை “தாய்ப்பால் வாரமாக” கொண்டாடுகிறது. வருடந்தோறும் ஈஷா மருத்துவ மனைகளில் தாய்ப்பால் புகட்டுதல் குறித்த விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாய் தாய்ப்பால் குறித்த தகவல்களைப் பகிர்கிறோம்.
தாய்ப்பால் துளிகள்! (Breastfeeding in Tamil)
- பிள்ளை பிறந்ததுமே (சுகப்பிரசவம்) (அ) (சிசேரியன்) அதிகபட்சம் அரை மணிக்குள் சீம்பால் புகட்ட வேண்டியதுதான் தாயாக நீங்கள் உங்கள் செல்லத்திற்கு அள்ளித்தரும் முதல் கிஃப்ட் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், சீம்பாலில்தான் உச்சபட்ச நோய் எதிர்ப்பு திறன் அளிக்கும் மூலக்கூறுகள் உள்ளன.
- குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவுமே தரக் கூடாது. 6 மாதங்களுக்கு பிறகுதான் பிற உணவுகளை மெல்ல சேர்க்கலாம்.
- 6 மாதங்கள் வரை புட்டியில் அடைத்த பசும்பால், டின் பவுடர்கள், ஏன் தண்ணீர் கூட கட்டாயம் தரக் கூடாது.
- குழந்தையின் 18 மாதங்கள் வரை தொடர்ச்சியாய் தாய்ப்பால் புகட்டுவது வாழ்நாள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
- தாய்ப்பால் சரியான முறையில் கிடைக்க வேண்டுமெனில், குழந்தை தாயின் முலைக் காம்பை முறையாய் பற்றியிருப்பது அவசியம்.
தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளில் சில:
- கிறுமித்தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, நெஞ்சக சளி, காது வலி/சீழ், மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்கிறது. அப்படி ஏற்படினும், அதன் தீவிரம் மிகக் குறைவாகவே இருக்கும்.
- 28 நாள் முதல் 1 வயது வரை ஏற்படும் குழந்தைப் பருவ உயிரிழப்பு பெருமளவு தவிர்க்கப்படுகிறது.
- தாய்ப்பாலில் கிடைக்கும் அபரிமிதமான நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள், குழந்தையின் உணவுக்குழாயில் பாதுகாப்பு கவசமாக படிந்து விடுகின்றன. இதனால், உணவு சார்ந்த அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைந்து, வளரும் பருவத்தில் அனைத்து வகை உணவுகளும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, உடல் வளர்ச்சி திடகாத்திரமாக அமைகிறது. இன்றைய தேதியில், பீடியாட்ரீஷியங்களை மொய்க்கும் ‘யங்’ தாய்மார்கள், “என் பிள்ளைக்கு எந்த ஃபுட்டும் ஒத்துக்க மாட்டேங்குது டாக்டர்.. உடம்பு போடவே மாட்டேங்குது” எனும் புலம்பல்களுக்குப் பின் பச்சிளம் பருவத்தில் பிள்ளைக்கு முறையான தாய்ப்பால் உணவு கிடைக்காததே காரணம்.
- குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சில வகையான கேன்சர்கள், பிற்கால வாழ்வில் ஏற்படும் சர்க்கரை நோய், உடற்பருமன் மற்றும் மனச் சோர்வில் இருந்தும் இதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கிறது.
தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கு உண்டாகும் நன்மைகளில் சில:
- பேறு கால மனச்சோர்வு தொலைகிறது.
- மார்பகப் புற்றுநோயின் வாய்ப்பு அறவே குறையும்
- உடல் ஹார்மோன் நிலையில் சமநிலை ஏற்படுவதால், கர்ப்பப் பை பலமடைந்து சீரான மாதவிடாய் ஏற்பட உதவுகிறது.
- தாய்ப்பால் புகட்டுவதால் (குறைந்தது 6 மாதம் முதல் 18 மாதம் வரை) ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஒரு இயற்கையான கருத்தடை உபாயமாக இருக்கிறது. அடுத்த பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போட உதவும்.
மேலே நாம் அடுக்கிய அனைத்தும், நவீன அறிவியலின் ஆய்வு முடிவுகள். ஆனால், ஆய்வுக்கும் அப்பாற்பட்டு, ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையிலான உணர்வு ரீதியான தொடர்பை வாழ்நாள் முழுதுமே வலுப்படுத்தும் வல்லமை குழந்தைப்பருவ தாய்ப்பாலுக்கு உண்டு என்பது பத்து பிள்ளை பெற்ற நம் பாட்டிகள் தலைமுறை அனுபவமாய் அறிந்த உண்மையே!
ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் பெண்களிடத்தில் அதிகம் இருப்பதாலும், டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோன் ஆண்களிடத்தில் அதிகம் இருப்பதாலும்தான், பருவ காலத்தில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி பெண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏற்படுகிறது.
அதே போல், கர்ப்ப காலம் முழுதும் ப்ரொஜெஸ்டெரோன் எனும் ஹார்மோன் உச்சநிலை பெறுவதால் பால் சுரப்பிகளின் வளர்ச்சி கர்ப்ப காலத்தில் அபரிமிதமாக ஏற்பட்டு பால் சுரக்க தயார் நிலையை அடைகிறது.
இறுதியில், பிள்ளை பேறுக்குப் பின் ப்ரொலாக்டின் எனும் ஹார்மோன் சரியான சமயத்தில் தாயின் இரத்தத்தில் உயர்வதால்தான் குழந்தையின் உயிர் அமுதமாய் தாய்ப்பால் சுரக்கிறது.
- நோய் எதிர்ப்பாற்றல் (Immunity)
- சுவாசம், இருதய துடிப்பு, ஜீரண மண்டல செயல்பாட்டுக்கு தேவையான சக்தி (Energy)
தாய்ப்பாலின் சத்துக்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் அதன் ஒவ்வொரு சிறிய அம்சமும்கூட குழந்தையின் இந்த இரு தேவைகளை கனகச்சிதமாக நிறைவேற்றுவதாகவே இருக்கிறது.
மேலும், குழந்தை கருவிலிருந்து வெளியேறிய அடுத்த கணமே தாய் தன் மாரோடு அணைத்து பால்புகட்ட நவீன அறிவியல் அறிவுறுத்துகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஆச்சரியம் யாதெனில், உள்ளபடி தாய் பால் புகட்டுகிறாள் என்பதை விட, தாய் மயக்க நிலையில் பால் புகட்ட முடியாமல் இருந்தாலும் குழந்தை தானே உறிஞ்சுகிறான் என்பதே உண்மை. எந்த ஒரு பழக்கப்படுத்துதல் மற்றும் பயிற்சி இல்லாமலேயே பால் உறிஞ்சும் திறனை (sucking reflex) ஒவ்வொரு குழந்தையின் DNAவிலேயே பொதித்து வைத்திருக்கும் இயற்கையின் பேரறிவை மெச்சத்தானே வேண்டும்!
ஒரு குறைமாதக் குழந்தை பெற்ற தாயின் பாலுக்கும், நிறைமாதத்தில் ஈன்ற தாயின் பாலுக்கும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஏனெனில், குறை/நிறை மாத குழந்தைகளின் உடலியல் தேவைகள் வெவ்வேறு. ஒவ்வொரு முறை பால் புகட்டப்படும்போதும், முதல் சில மில்லி பால் அதிக நீர்த்தன்மையுடன் குளுக்கோஸ் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும் நொதிகளை அள்ளித் தருகிறது. இவை ஒரு குறிப்பிட்ட அளவு சுரப்பிகளில் இருந்து குழந்தைக்கு சென்றடைந்த பின்னரே அதிக கெட்டித்தன்மையுடன் கொழுப்பு சத்து நிறைந்த பால் சுரக்கிறது. இது ஏனெனில், உயிர் வாழ உடனடி மற்றும் அத்தியாவசிய தேவை குளுக்கோசும், நோய் எதிர்ப்பாற்றல்தான் அல்லவா? உடல் வளர உதவும் கொழுப்பு சத்து முன்னால் வர வேண்டிய அவசியம் இல்லையே!
பால் சுரக்கும் தன்மையில்கூட இயற்கையின் ஆற்றல் அதிசயம்தான்! ஆகவேதான், தாய்மார்கள் ஒவ்வொரு முறை பால் புகட்டும்போதும், ஒரு மார்பில் முழுமையாய் பால் கொடுத்த பின்னரே அடுத்த மார்பில் புகட்ட வேண்டும். சமச்சீரான வளர்ச்சிக்கு இந்த நடைமுறை அவசியம்.
தாய் எனும் அற்புத உயிர்:
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
இந்த வாக்கு பொதுவாக நன்றி மறவாமைக்காக கூறப்படுவது. ஆனால், இதற்கும் ஒரு படி மேலாய் இவ்வாக்கிற்கு உண்மை சாட்சியாய் நிற்பது ஒரு தாயவளின் முலைப்பாலே! ஏனெனில், ஒரு தாயாய் ஒரு பெண் தன் குழந்தைக்கு அளிக்கும் முதல் உண்டிதானே அக்குழந்தையின் உயிரையே காக்கிறது? இதைப் படிக்கும் வளர்ந்த குழந்தைகள் (நீங்கதாங்க...) உங்களை அந்தச் சூழ்நிலையில் இருத்தி உருவகப்படுத்திப் பாருங்கள். உங்கள் தாய் என்கிற அந்த அற்புத உயிரின் மேல் ஒரு நன்றியுணர்வு அனிச்சையாகவே ஏற்படும்!
பொதுவாக தாயின் முலைக்காம்பை பற்றிய குழந்தை தன் தாடையை வலுவாய் அசைப்பதன் (Active Sucking) மூலம் மட்டுமே அவனுக்கு பால் கிடைக்கிறது. ஆனால், இந்த புட்டிகளின் ரப்பர் மூலம் பால் தானாகவே சொட்டுவதால், பிள்ளை தன் தாடையை அசைக்க தேவை இல்லை. ஹாயாக பொக்கை வாயை திறந்தாலே போதும், அவன் பசி அடங்கும். இதனால், ஒரு முறை புட்டிக்கு அவனைப் பழக்கப்படுத்தினால், தாயின் மாரிலும் அவன் பால் தானாக வரும் எனத் தாடை அசைவு ஏற்படுத்தாமல் இருப்பதால் பால் கிடைப்பதில்லை. இதனை மருத்துவ மொழியில் Nipple Confusion என்போம். ஆதலால், புட்டிகளை பணம் கொடுத்து வாங்கும்போது தாய்/சேய் இருவருக்குமே மன குழப்பத்தையும் விலைக்கு வாங்குகிறீர்கள் என அர்த்தம்.
- 1 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற கிருமித் தொற்றுகளில், 90 சதத்திற்கும் மேல் ஏற்பட காரணம் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத புட்டிகளே என்பதை நினைவில் வையுங்கள்.
- சுத்தப்படுத்தும் முறை: ஒவ்வொரு முறை பிள்ளை புட்டிப் பால் அருந்தும்போதும் புட்டி. அதன் ரப்பர், உள் மூடி, வெளி மூடி என அனைத்தும் 100 டிகிரி கொதி நீரில், குறைந்தது அரை மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். “இப்ப பாதி சாப்பிடுவான்.. அரை மணி கழிச்சு பாதி சாப்பிடுவான். அதையும் மிச்சம் வெச்சான்னாலும் சாயங்காலம் மீதிய சூடு பண்ணி அதே பாட்டில்ல குடுப்பேன்” என்கிற தாய்மார்களே உஷார்! உங்கள் பிள்ளையின் பேதிக்கு நீங்களே கூட காரணம் ஆகலாம்!
- ஆக, புட்டியை முறையாய் உபயோகிக்கவும் அல்லது தேவையெனில் எவர்சில்வர் சங்கு/கிண்ணம் பயன்படுத்துவதையே அறிவுறுத்துகிறோம்.
தாய்ப்பால் அதிகரிக்க:
இன்று மகப்பேறு மருத்துவர்களிடம் புதுத்தாய்கள் வினவும் பொதுவான கேள்வி “தாய்ப்பால் தேவையான அளவு சுரக்கமாட்டேங்குதோ? பாப்பாக்கு பால் பத்தலயோனு டவுட்டா இருக்கு டாக்டர்...” என்பதே!
இந்தக் கேள்விக்கு எதிர்க் கேள்விகளாய் கீழ்கண்ட இரண்டையும் மருத்துவம் முன் வைக்கிறது.
- குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாய் 6 முதல் 7 முறை சீராக சிறுநீர் கழிக்கிறானா?
- பிறந்து 1 மாத முடிவில் குறைந்தபட்சம் 500 கிராம் எடை கூடி இருக்கிறதா? இரு கேள்விகளுக்கும் பதில் ‘ஆம்’ எனில் தாய்ப்பால் சரியான அளவில் குழந்தைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.
குழந்தை அடிக்கடி அழுவது, குறைவான இரவுத் தூக்கம், விரல்/முஷ்டியை கவ்வியிருப்பது, அடிக்கடி தாய்ப்பால் அருந்துவது, தாய்ப்பால் அருந்துவதற்கு மிகக்குறைந்த அல்லது மிக அதிக நேரம் எடுத்துக்கொள்வது போன்றவை குழந்தையின் இயல்பான சமிஞ்கைகளே! ஆனால், இவற்றையெல்லாம் வைத்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளதோ? என குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக 90% தாய்மார்களுக்கு இந்த மனக்குழப்பத்தை முறையாய் தீர்ப்பது மட்டுமே மருந்து.
தாய்ப்பால் சுரக்க என்ன சாப்பிட வேண்டும்? (Thaipal Surakka Enna Sapida Vendum?)
அப்படியும், பால் சுரப்பு குறைவாய் உள்ளோர்க்கு, குழந்தை சரியான முறையில் மார்பை பற்றியிருப்பதை உறுதி செய்தும், வீட்டு சூழ்நிலையில் நிலவும் `ஸ்ட்ரெஸ்` குறைத்தாலே, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தமுடியும். மூலிகை மருத்துவ முறையில், அமுக்கரா சேர்ந்த `தாதுகல்ப லேகியம்`, தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த `சதாவரி லேகியம்` தாய்ப்பால் பெருக்கிகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. தரமான, நம்பிக்கைக்குரிய இடத்தில் இவற்றைப் பெற்று உபயோகிக்கலாம்.
ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும். காலை ஆபீஸ் செல்லும் முன் ஓரிருமுறை பால் புகட்டியபின், ஒரு சுத்தமான கிண்ணத்தில் முடிந்த அளவு பாலை பீய்ச்சி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது சுத்தமான ஸ்பூன் கொண்டு ஊட்டலாம். சாதாரண வெப்பத்தில் 3 முதல் 4 மணி நேரமும், ஃப்ரிட்ஜில் 24 மணி நேரமும், தாய்ப்பால் கெடாது. அலுவலகத்தில் குளிர் சாதன வசதி இருப்பின், இதே முறையில் ஓரிருமுறை இரு மார்பிலிருந்தும் பாலை வெளியேற்றிவிடுவது, மார்பில் பால்கட்டிகள் வராமல் தடுக்கும். ஃப்ரிட்ஜில் குளிர்ந்த தாய்ப்பாலை நேரடியாக சூடு படுத்தாமல், சுடுநீர் கொண்ட பாத்திரத்தினுள் வைத்து, கிண்ணத்தை இயல்பு வெப்பத்திற்கு கொண்டு வரலாம். இரவு நேரங்களில் அதிகமுறை பால் கொடுப்பதும் அவசியம்.
தாய்ப்பாலுடன் சேர்த்து துணை உணவுகள் துவக்கும் தருணத்தில், நம் பாரம்பரிய `மம்மு` சாப்பாட்டுக்கு நிகர் ஏதுமில்லை. ஆம், நம் அரிசி சாதம், பாசிப்பயரு, சுத்தமான உருக்கிய பசு நெய் கலவைக்கு `சூப்பர் ஃபுட்` என அறிவியல் சமூகம் தன் ரப்பர் ஸ்டாம்பை அழுந்த பதிந்துவிட்டது. நீர் ஆகாரமாய் கொடுப்பதைத் தவிர்த்து, பருப்பு சாதம் போல் குழைந்த நிலையில் கொடுக்க வேண்டும். மெல்ல, கோதுமை, கேழ்வரகு, தினை போன்ற தானியங்கள், கீரை வகைகள், எண்ணெய்யில் பொரித்த வகைகளை சிறிது, சிறிதாய் ஊட்டலாம். அசைவ வீடுகளில் மீன், முட்டை போன்றவற்றையும் மெல்ல அறிமுகப்படுத்தலாம்.
பசும்பால், குறிப்பாக பாக்கெட் பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். “அது எப்படி சார், மாட்டுப் பால குடுக்கக்கூடாதுனு சொல்லிப் போட்டிங்கோ?” என சண்டைக்கு வரும் பாக்கெட் பால் குடும்பங்களே, பச்சிளங் குழந்தைகளுக்கு ஒவ்வாமை (ஃபுட் அலர்ஜி) மற்றும் அடிக்கடி ஏற்படும் சளி தொற்றுக்கு, பாக்கெட்பாலின் மேல் ஆராய்ச்சியாளர்களின் சந்தேகம் வலுத்துவருகிறது என்பதை அறிக!
“உடல்நிலை அளவில், இந்தத் தலைமுறைதான் மிக பலவீனமான தலைமுறையாய் விளங்குகிறது” என சத்குருநாதர் கூறுவதை நினைவிற்கொண்டுதான் தாய்மையையும் அணுகவேண்டியுள்ளது.
நவீன மருத்துவத்தின் நுண்ணுயிர் எதிரி (ஆன்டிபையாடிக்) புரட்சியால் காலரா, ப்ளேக், மலேரியா என மக்கள் கொத்துக்கொத்தாய் கொத்துக் கொத்தாய் மடிந்த நிலை மாறி, மனிதனின் சராசரி ஆயுட்காலம் நீண்டிருக்கிறது. அப்படி இருந்தாலும் முந்தின தலைமுறையிடமிருந்த மன, உடல் திடத்தை கெஞ்சினாலும் இன்றைய தலைமுறை பெற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை.
இது பிள்ளை பெற்ற தாய்மார்க்கும் பொருந்தும்தானே! நிறை மாத நாளிலும், உலக்கை வைத்து நெல் குத்திக்கொண்டு, வயலில் களை பறித்துக் கொண்டு, வலி வந்ததும் போய் சுகமாய் பத்து பிள்ளை பெற்ற பாட்டிக் கதைகளுக்கு இன்றும் நம் தாய்/தந்தை தலைமுறை சாட்சி. ஆனால், இன்று ஒரு குழந்தை பெறுவதற்குள்ளேயே நவீனத்தாய்மார் படும்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
காலமாற்றத்தில், நவீன அறிவியல் உதவியுடன் பேறு கால மரணங்களை வெகுவாகக் குறைத்துவிட்டோம். ஆனால், குழந்தை பெறுவது, பராமரிப்பது எனும் இயற்கையாய் நிகழும் ஒரு நிகழ்வின் மீது பெரிய அளவு மனக்குழப்பம், அச்சம், மன அழுத்தம் தற்கால மகளிருக்கு பரவலாக ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டமே.
தாய்மை அடைந்த பெண்ணின் மனதைப் பக்குவப்படுத்த பாட்டி இல்லை, அச்சம் நீக்க அண்ணியோ, அத்தையோ, சித்தியோ கூட இல்லை. குழப்பம் களைய சிலருக்கு மாமியாரோ, தாயோ கூட அருகில் வாய்க்கும் பாக்கியம் இன்றி ஏழு மாதம் வரை (அதுக்கு பிறகுதானேங்க மெட்டர்னிட்டி லீவு!) தனிக்குடித்தனமும், ஐடி வேலையும் என தவிக்கும் பெண்கள்தானே இன்று அதிகம். இதை மீறியும் மன அழுத்தம் களைய அரை குறையாய் தெரிந்து கொண்ட தோழிகளின் செல்போன் கவுன்சிலிங், இன்டெர்னெட்டில் கொட்டிக் கிடக்கும் கோடித் தகவல்கள் என அவை பின் செல்லும்போது, "கொடும, கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க இன்னொரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்" கதையாகிவிடுகிறது.
இந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீர்வாய் சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷாவின் மகப்பேறு மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்டதுதான், ஈஷா தாய்மை வகுப்புகள்!
இன்னொரு உயிர் தன் கருவில் இருப்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு தாய்க்கும் உணர்த்தி, தாய் சேய் பந்தத்தை வலுப்படுத்துவதும், கர்ப்ப காலத்தை அத்தாய்க்கு ஓர் அற்புத அனுபவமாய் மாற்றுவதுமே ஈஷா தாய்மையின் நோக்கம்.
தாய்மை வகுப்புகள் கர்ப்பகால பாதுகாப்பு முதல் குழந்தை வளர்ப்பு வரையிலான அடிப்படை விஷயங்களை ஒலி, ஒளி பயிலரங்கங்கள் மூலம் எளிமையாக தெளிவுபடுத்துவதில் தொடங்குகிறது.
தொடர்ந்து இடுப்பு எலும்பு மற்றும் தசைகளை பலப்படுத்தும் எளிய முறை யோகா மற்றும் சக்திமிக்க பிராணாயம, தியானப் பயிற்சிகள் மனதைத் தளர்வாகவும், தனித்த ஆற்றலுடனும் விளங்கச் செய்கின்றன. இயற்கை முறையிலான உணவு குறித்த விழிப்புணர்வு மற்றும் சமையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தவிர, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் கலை மற்றும் கைவினை பயிற்சிகள், புத்துணர்வு தரும் குழு விளையாட்டுகளும் உண்டு. பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர் துணையுடன் கர்ப்பிணிப் பெண்கள் ஒரு குழுவாக தங்களுக்குள் பழகி, தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு உருவாவதால் அச்சம், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க வழிகோலுகிறது.
கர்ப்பகாலத்தில் பின்பற்றப்படும் இத்தகைய ஆக்கப்பூர்வமான பயிற்சி மற்றும் சிந்தனையினால், பிறக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் சிறப்பாக இருக்க உதவுகிறது.
ஈஷா தாய்மை வகுப்புகள் கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்தில் 25 நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதனால், தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் பலனடைந்து வருகின்றனர்.
தாய்மை வகுப்புகள் உங்கள் ஊரிலும் நடக்க வேண்டும் என விருப்பம் உள்ளோர், மேலும் தாய்மை வகுப்பை ஏற்று நடத்தி இவ்வாய்ப்பை மேலும் பல தாய்களுக்கு பரிமாறும் விருப்பம் கொண்ட தன்னார்வத்தொண்டர்களுக்கு ஈஷா மையத்தில் குறுகிய கால ஆசிரியர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தொடர்புக்கு: திருமதி. கோகிலாம்பாள் : 94878 95440 ஈஷா ஆரோக்யா: சென்னை : 94425 90099 கோவை : 83000 55555 சேலம் : 94425 48852
பிரசவ லேகியம்: பாரம்பரியமாக "சௌபாக்ய சுந்தி லேகியம்" எனும் சுக்கு, கொத்துமல்லி, பனைசர்க்கரை, சதகுப்பை, நெய் சேர்ந்த "பிரசவ லேகியம்" 7 மாத கர்ப்பம் முதல் குழந்தையின் ஒரு வயது வரை தாய்க்குத் தருவது வழக்கம். இதன் மூலம் கர்ப்பச்சூடு குறையும். இயற்கையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது.
பிரசவத்திற்கு பின்னர் கர்ப்பப்பை மீண்டும் ஆரோக்கியமான முறையில் சுருங்க உதவுகிறது. மலக்கட்டை நீக்குகிறது. செரிமான பாதை தொந்தரவுகள் வராமல் காக்கிறது. இதன் நற்குணம் தாய்ப்பாலிலும் வியாபிப்பதால், குழந்தைக்கும் மாந்தம் முதலான செரிமான கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது. இதனை நம் தமிழக அரசே, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு “தாய்சேய் நல பெட்டகத்தில்” “சுந்தி லேகியம்“ எனும் பெயரில் வழங்குவது வரவேற்கத்தக்கது.
உரை மருந்து: சுட்ட வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கோஷ்டம், நுனா என பல மூலிகைகளை உரைத்து, தாய்ப்பாலுடன் குழைத்துக் கொடுப்பது குழந்தையின் இயற்கை தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. ஏழு நாளில் தொடங்கி 1 வயது வரை தொடர்ந்து கொடுக்க ஏற்றது.
இவை இரண்டும் ஈஷா மருத்துவமனைகளில் கிடைக்கின்றன.
நன்றி: சித்த மருத்துவ குறிப்புகள் - மரு. புவனேஸ்வரி, ஈரோடு; மரு.சக்தி, ஈஷா ஆரோக்யா, சேலம்.
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil), தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் !
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – தாய்ப்பாலின் ஏராளமான எளிதில் உறிஞ்சப்படும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. ஆக்ஸிஜனேற்றிகல், நொதிகள், நோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் தாயிடமிருந்து நேரடி ஆன்டிபாடிகள் போன்றவற்றை அளிக்கிறது. தாயிடமிருக்கும் முதிர்ந்த நோய் எதிர்ப்பு மண்டலம் குழந்தைக்கும் அளிக்கிறது.
இதனால் குழந்தைகள் நோயிலிருந்து பாதுகாக்க உதவும் வகையில் தாய்ப்பாலில் உதவுகிறது. இம்யூனோகுளோபூலின் பூச்சுகள் குழந்தையின் வளர்ந்திராத குடல்களின் புறணி கிருமிகள் மற்றும் ஒவ்வாமை மருந்துகள் கசிவதை தடுக்க உதவுகிறது. தாய்ப்பாலில் குழந்தைகளை இயற்கையாகவே ஆற்றும் பொருள்களும் உள்ளன.
தாய்ப்பால் என்றால் என்ன?
தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகிறது. பெரும்பாலும் சுகாதார வல்லுநரக்ள் குறைந்தது 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பிரத்யேகமான தாய்ப்பால் கொடுக்க பரிந்துரைக்கப்படுகின்றன.
தாய்ப்பாலில் குழந்தையின் முதல் 6 மாதங்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரிவிகிதமாக உள்ளன. குழந்தையின் தேவைகேற்ப தாய்பாலின் சுரப்பு ஒவ்வொரு மாதத்திலும் அதிகரிக்க செய்யும்.
குழந்தை பிறந்த உடன் மார்பகங்களில் கொலஸ்ட்ராம் எனப்படும் மஞ்சள் நிற அடர்த்தியான திரவம் உருவாகின்றன. இது அதிக புரதம், குறைவாக சர்க்கரை மற்றும் நன்மை பயக்கும் சேர்மங்கள் கொண்டவை. பிறந்த குழந்தையின் செரிமான பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கொலஸ்ட்ரம் உதவுகிறது. குழந்தையின் வயிறு பெரிதாக பெரிதாக மார்பகங்களில் அதிக அளவு பால் தயாரிக்க தொடங்குகின்றன.
தாய்ப்பாலில் இல்லாத ஒரே வைட்டமின் எதுவென்றால் வைட்டமின் டி தான். தாயிடம் வைட்டமின் பற்றக்குறை ஏதேனும் இருந்தால் போதுமான தாய்ப்பால் சுரக்காது. வைட்டமின் டி சொட்டுகள் பொதுவாக குழந்தைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
குழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பதால் நீங்கள் குழந்தையின் உடலில் ஆன் டி பாடிகளை அனுப்புகிறீர்கள். இதனால் குழந்தைக்கு தொற்றுநோய்கள் குறைதல், திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி அபாயம் குறைதல் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
தாய்ப்பால் சுரப்பு என்றால் என்ன?
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு உணவளிக்கும் இயற்கையான வழியாகும். தாயின் உடலில் தயாரிக்கப்படும் பால் குழந்தைக்கு மார்பகங்கள் வழியாக முலைக்காம்பின் மூலம் குழந்தை உறிஞ்சப்படுகிறது. குழந்தை பிறந்து வெகு நாட்களுக்கு முன்பே தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் சில மணி நேரம் முதல் வரும் பால் கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்பட்கிறது.
இது புரதம் நிறைந்த பெரும்பாலும் அடர்த்தியான திரவமாகும். இது குழந்தையை நீரேற்றமாக இருக்க செய்கிறது. இந்த ஆன் டி பாடிகள் நிறைந்த பால் பிறந்த குழந்தையை தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.
கொலஸ்ட்ரம் தாய்ப்பாலுக்கு பிறகு?
பிரசவித்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு பிறகு பெருங்குடல் முதிர்ந்த பாலாக கொலஸ்ட்ரம் மஞ்சள் நிற அடர்த்தி பால் மாறும். இந்த நாட்களில் குழந்தையின் உடல் எடையை குறைக்கும். இது சாதாரணமானது. குழந்தை தாய்ப்பால் குடிக்க குடிக்க அவர்கள் உடல் தேறி வரும்.
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) என்ன?
தாய்ப்பாலின் முக்கியமான ஆன்டி பாடிகள் குழந்தைக்கு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும் குணங்களை அளிக்கிறது. இது ஆரம்ப மாதங்களில் முக்கியமானது.
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – நோய் எதிர்ப்பு சக்தி வழங்குகிறது
குறிப்பாக முதல் பால் கொலஸ்ட்ரம் என்னும் மஞ்சள் நிற அடர்த்தி பாலுக்கு பொருந்தும். கொலஸ்ட்ரம் அதிக அளவு இம்யூனோகுளோபூலின் மற்றும் பல ஆன் டி பாடிகளை வழங்குகிறது. தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு செல்லும் ஆன் டி பாடிகள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கின்றன.
குழந்தையின் மூக்கு, தொண்டை மற்றும் செரிமான அமைப்பில் பாதுகாப்பான அமைப்பை உண்டாக்குவதால் குழந்தை நோய்வாய்ப்படாமல் பாதுகாக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைக்கு இருக்காது. தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு நிமோனியா, வயிற்றுப்போக்கு, தொற்று நோய் போன்ற உடல் நல பிரச்சனைகள் உண்டாகலாம்.
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – தாய்ப்பால் கொடுப்பதால் நோய் ஆபத்து குறையும்.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் உண்டாகும் அபாயம் குறையலாம். நடுத்தர காது நோய்த்தொற்றுகள், குறிப்பாக நடுத்தர காது, தொண்டை மற்றும் சைனஸ் நோய்த்தொற்றுகளிலிருந்து குழந்தை பருவம் முதலே பாதுகாக்கப்படலாம்.
சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் தாய்ப்பால் பல சுவாச மற்றும் இரைப்பை குடல் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கும். சளி மற்றும் தொற்று போன்றவை உண்டாவதற்கான ஆபத்து குறையும். குடல் தொற்று, தாய்ப்பால் குடல் தொற்று குறைப்பு அபாயத்தை கொண்டுள்ளது.
குடல் திசு சேதத்தை குறைக்க செய்கிறது. திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுடன் குறைவான அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வாமை நோய்கள் தாய்ப்பால் ஆஸ்துமா, அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் அரிக்கும் தோலழற்சியின் குறைவான ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
குடல் நோய்கள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கிரோன் நோய், பெருங்குடல் அழற்சி வளர்ப்பதற்கான ஆதாரம் குறைவாக இருக்கலாம்.
நீரிழிவு நோய் டைப் 1 நீரிழிவு மற்றும் இன்சுலின் அல்லாத நீரிழிவு நோயை எதிர்கொள்வதற்கான ஆபத்தும் குறைக்கப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவ ரத்த புற்றுநோய், குழந்தை பருவ லுகேமியா ட்ரஸ்டட் ஆபத்தை குறைப்பதிலும் தாய்ப்பால் இணைக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமாக இருக்கும்.
தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியமான எடையை ஆரோக்கியமாக ஊக்குவிக்கிறது. அதோடு குழந்தையின் உடல் பருமனையும் தடுக்கிறது. குழந்தைக்கு 4 மாதங்களுக்கு மேலாக தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் உருவாகும் வாய்ப்புகளில் கணிசமான குறைப்பு உள்ளதாக ஆய்வு காட்டுகிறது.
வெவ்வேறு குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியின் காரணமாக குழந்தையின் குடலில் நல்ல பாக்டீரியாவின் ஆதாரம் இது கொழுப்பை சேமிக்கும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு ஃபார்முலா ஊட்டப்பட்ட குழந்தையை காட்டிலும் லெப்டின் அதிகமாக உள்ளது. இது பசியையும் கொழுப்பையும் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய ஹார்மோன் ஆகும்.
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – குழந்தைகள் சிறந்தவர்களாக வளர்வார்கள்
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் இடையில் மூளை வளர்ச்சியில் வேறுபாடு இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது ஊட்டச்சத்து உள்ளடக்கம், உடல் நெருக்கம் அதாவது தாய்க்கும் குழந்தைக்குமான நெருக்கம், கண் தொடர்பு போன்றவற்றால் இருக்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு அதிக நுண்ணறிவு இருப்பதாகவும் அவர்கள் வளரும் போது பல சிக்கல்கள் அதிகமாகாமல் பார்த்துகொள்ளும் அளவுக்கு சிறந்தவர்களாகவும் இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
தாய்ப்பால் குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது. குழந்தைகளின் நீண்ட கால மூளை வளர்ச்சியில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது.
தாய்ப்பால் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – அம்மாவின் உடல் எடை குறையும்
தாய்ப்பால் அதிக கலோரிகளை எரிக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து 3 மாதங்கள் கழித்து தாய்ப்பாலூட்டிய அம்மாக்கள் பாலூட்டும் தாய்மார்களுடன் ஒப்பிடும் போது கொழுப்புக்களை எரித்தது கண்டறியப்பட்டது.
தாய்ப்பால் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – கருப்பைக்கு நன்மை செய்யும்
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கர்ப்பப்பைக்கும் நன்மைகள் உண்டு. பேரிக்காய் வடிவில் இருக்கும் கருப்பையானது கர்ப்பகாலத்தில் அடிவயிறு முழுமையும் பரவும் அளவு விரிவடைகிறது.
பிரசவத்துக்கு பிறகு கருப்பை ஆக்கிரமிப்பு எனப்படும் செயல்முறை வழியாக செல்கிறது. இதனால் கருப்பை முந்தைய அளவுக்கு திரும்புகிறது. கர்ப்பம் முழுவதும் அதிகரிக்கும் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் இந்த செயல்முறையை சீராக்க உதவுகிறது.
உடல் பிரசவத்தின் போது அதிக அளவு ஆக்ஸிடாஸின் சுரக்கிறது. இது குழந்தை பிரசவிக்கவும், இரத்தபோக்கை குறைக்கவும் உதவும். தாய்ப்பால் கொடுக்கும் போதும் உடலில் இந்த ஆக்ஸிடாஸின் அளவு அதிகரித்து கருப்பை சுருக்கங்களை ஊக்குவிக்கிறது. மேலும் இரத்தபோக்கை குறைக்கிறது. கருப்பை முந்தைய அளவுக்கு திரும்ப செய்கிறது.
தாய்ப்பால் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – தாய்மார்களுக்கு மனச்சோர்வு உண்டாகிறது
பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வு கொடுக்கும் ஒருவிதமான குறைபாட்டுக்கு ஆளாகலாம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு (ஆரம்பத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுடன் தாய்ப்பால் கொடுக்காத அம்மாக்களை ஒப்பிடும் போது ) பிரசவத்துக்கு பிறகான மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது தெரிகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது மனச்சோர்வு அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுங்கள்.
தாய்ப்பால் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – தாய்க்கு நோய் அபாயத்தை தடுக்கிறது
தாய்ப்பால் புற்றுநோய்க்கும் பல நோய்களுக்கும் எதிரான நீண்ட கால பாதுகாப்பை தருகிறது. தாய்ப்பால் கொடுக்கும் நேரம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தம், கீல்வாதம், உயர் இரத்த கொழுப்புகள்., இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் தடுக்கின்றன.
தாய்ப்பால் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) – மாதவிடாயை தடுக்கின்றன
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அண்டவிடுப்பின் மற்றும் மாதவிடாய் நிறுத்தப்படுகிறது. மாதவிடாய் சுழற்சிகள் தற்காலிகமாக இடைநீக்கம் இருபதால் கர்ப்பங்களுக்கு இடையில் சில காலம் அவகாசம் இருப்பதை உறுதி செய்கிறது. இது இயற்கையான வழியாக இருக்கலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்கலாம்?
குழந்தைக்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்பதை அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தையின் முதல் ஆண்டு நிறைவடையும் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு புதிய உணவை சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஊட்டச்சத்து சரிவிகித உணவை கொடுக்க வேண்டும். குழந்தை திட உணவுக்கு மாறும் போது சிறந்த ஊட்டச்சத்து உணவோடு ஈடு செய்ய வேண்டும். குறிப்பாக தாய்ப்பாலை நிறுத்திய பிறகு.
தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!
தாய்ப்பால் கொடுக்கும் போது வாய்வுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு, மாங்காய் மற்றும் வாழைக்காய்களை தவிருங்கள். சைவமுறை உணவை எடுத்துகொள்பவர்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவை எடுத்துகொள்கிறீர்களா என்பதை கவனியுங்கள். தைம், பெப்பர்மிண்ட், முட்டைகோஸ் உணவுகளையும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும்.
பொதுத்துறப்பு
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Latest Blogs Category
- Deepthi Jammi News
- இன்பெர்டிலிட்டி & ப்ரி-ப்ரெக்னேன்சி
- ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி
- பெண்ணோயியல்
- பொது ஆரோக்கியம்
- பொஸ்ட்-ப்ரெக்னேன்சி
Stay Connected
Sign in to your account
Username or Email Address
Remember Me
- Samayam News
- World Breastfeeding Week
உலக தாய்ப்பால் வாரம் 2024 (World Breastfeeding Week 2024)
உலக சுகாதார நிறுவனம் பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஏனெனில் பிறந்த குழந்தையின் ஆரோக்கியம் ஆயுள் வரை நீடிக்க இன்றியமையாதது தாய்ப்பால். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் அற்புதமான பல நன்மைகள் ஏற்படுகின்றன. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ஊட்டச்சத்து நிறைவாக அளிக்க தாய்ப்பாலால் மட்டுமே முடியும். தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயம் குறைகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தாய்ப்பால் அளிப்பதை போற்றி கொண்டாட தாய்ப்பால் தினமாக அல்லாமல் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது., உலக தாய்ப்பால் வாரம் 2024 (world breastfeeding week 2024) செய்திகள்.
உலக தாய்ப்பால் வாரம் 2024 : கிச்சனில் உள்ள இந்த 5 பொருள்கள் தாய்ப்பாலை அதிகமா சுரக்க செய்யுமாம்.. அம்மாக்களே கவனிங்க..!
ஆஸ்துமா இருக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா, உலக தாய்ப்பால் வாரம் 2024 : பாலூட்டும் தாய்க்கு முலைக்காம்பு வலியும்.. வீக்கமும்.. வெடிப்பும் வரும்.. சரி செய்வது எப்படி.. அவசியமான குறிப்புகள்.., தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் குடும்ப வரலாறு இருந்தாலும் தவிர்க்க முடியும்.. எப்படி.., உலக தாய்ப்பால் வாரம் 2024 : தாய்ப்பால் இருந்தும் தாய்ப்பால் கொடுக்க கூடாத அம்மாக்கள் யார்.. ஏன்.., குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் மார்பக ஆரோக்கியத்தை எப்படி பராமரிக்க வேண்டும், ஆறுமாதங்களுக்கு பிறகும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் கிடைக்கும் நன்மைகள்.., உலக தாய்ப்பால் வாரம் 2024 (world breastfeeding week 2024) வெப் ஸ்டோரி.
கருத்தரிக்காமல் பாலூட்ட முடியுமா? சுவாரஸ்ய தகவல் இதோ!
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 'வாழைப்பழம்' சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தைக்கு 1 வயதுக்கு பிறகும் 'தாய்ப்பால்' கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
உலக தாய்ப்பால் வாரம் 2024 (world breastfeeding week 2024) புகைப்படம்.
- உலகளவில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
- தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்க சுகாதார பயிற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் தாய்ப்பால் அளிக்கும் நிலைகள் பற்றி பயிற்சி அளித்தல்.
- தாய்ப்பாலின் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாலூட்டும் தாய்மார்களை ஆதரிக்க உரிய நடவடிக்கை அளித்தல்.
- தாய்ப்பாலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் சமூகத்துக்கு விழிப்புணர்வை அளித்தல்.
- சமீப வருடங்களாக பொது இடங்களில் தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேகமான தாய்ப்பாலூட்டுதல் அறை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தாய்ப்பால் பெறமுடியாத குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. இங்கு தாய்ப்பாலை தானமாக பெறலாம்.
- குழந்தை வளர வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் நிறைந்துள்ளது.
- இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் தனித்துவமான தன்மையை கொண்டுள்ளது.
- தாய்ப்பால் வயிறு மற்றும் குடல் ஜீரணிக்க எளிதாக இருக்கும்.
- தாய்ப்பால் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும். குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டி பாடிகள் கொண்டுள்ளன.
- குழந்தை வளர்ச்சிக்கு வேண்டிய கொழுப்பு, சர்க்கரை, நீர், புரதம் போன்றவற்றை கொண்டுள்ளன.
- குழந்தை பிறந்து ஆறுமாதங்கள் ஆகும் வரை தண்ணீர் கூட தேவையில்லை. பால் மட்டுமே போதுமானது. குழந்தைக்கு திட உணவு பழகினாலும் இரண்டு வருடங்கள் வரை இணைஉணவாக தாய்ப்பால் கொடுக்கலாம்.
- குழந்தையின் வயிற்றில் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை ஆதரிக்கும் லாக்டோஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
- குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்கு உதவும் கொழுப்புகள் தாய்ப்பாலில் உள்ளன.
- தாய்ப்பாலில் இருக்கும் லாக்டோஃப்ரின் மற்றும் IgA போன்ற புரதங்கள் குழந்தையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன.
- வயிற்றுப்போக்கு வாந்தி, நிமோனியா, சுவாச ஒத்திசைவு வைரஸ், கக்குவான் இருமல்,ஆஸ்துமா போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு காது தொற்று, பாக்டீரியா, மூளைக்காய்ச்சல் போன்றவையும் வராமல் தடுக்கின்றன. மேலும் திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறியிலிருந்தும் தடுக்கிறது.
- குழந்தை பருவ உடல் பருமன், குழந்தை வளர்ந்த பிறகு டைப் 2 நீரிழிவு நோய் குழந்தை பருவ லுகேமியா போன்றவற்றையும் தடுக்கிறது.
- தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு செலியாக் நோய், குடல் அழற்சி நோய் போன்ற பாதிப்பு அபாயம் குறைவு என்று ஆய்வுகள் காட்டுகிறது.
- பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வு குறைகிறது
- மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ் புற்றுநோய் தடுக்கப்படுகிறது
- ஆஸ்டியோபொராசிஸ்
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
- அதிக கொழுப்புச்சத்து
- பிரசவத்துக்கு பிறகு உடல் பருமன்
- போன்ற பக்கவிளைவுகள் வராமல் தவிர்க்கலாம். பிரசவத்துக்கு பிறகு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விரைவில் மீண்டு வரலாம்.
- தாய்ப்பால் எப்போது சுரக்கும்? கர்ப்பத்தில் 12-16 வாரங்களுக்கு இடையில் உடல் தாய்ப்பால் உற்பத்தி செய்ய தொடங்கும். குழந்தை பிறந்த உடன் கொலஸ்ட்ரம் என்னும் சிறப்பு வாய்ந்த தாய்ப்பால் பெறுவார்கள்.
- தாய்ப்பால் கொடுக்கும் போது வலிக்குமா? தாய்ப்பாலூட்டுவது வலியற்றது. எனினும் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது முதல் சில நாட்களில் முலைக்காம்புகளில் சிறிது மென்மை அதனால் வலி உண்டாகலாம்.
- தாய்க்கு காய்ச்சல் இருக்கும் போது தாய்ப்பால் கொடுக்கலாமா? பெரிய தீவிரமான ஹெச் ஐவி போன்ற தொற்றுக்கள், காசநோய், ஹெர்பெஸ் புண் மார்பகத்தில் இருக்கும் போது தாய்ப்பால் கொடுக்க முடியாது. எனினும் இது அரிதானது
- தாய்ப்பால் எவ்வளவு காலம் கொடுக்க வேண்டும்? அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க பரிந்துரைக்கிறது. அதன் பிறகு இணை உணவுகள் தொடங்கினாலும் தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்கலாம். ஆனால் 1 வருடம் வரை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்
- தாய்ப்பால் எவ்வளவு காலம் சேமிக்க முடியும் குளிர்சாதன பெட்டியில் 5 நாட்களுக்கும், ஃப்ரீசர் நிலையான உறைவிப்பான் எனில் அவற்றில் 3- 6 மாதங்கள் வரையிலும் டீப் ஃப்ரீசரில் 6-12 மாதங்கள் வரையிலும் சேமிக்கலாம்.
IMAGES
VIDEO
COMMENTS
முதற்பக்கம்; அண்மைய மாற்றங்கள்; விக்சனரி; விக்கிசெய்திகள் ...
உலகின் ஆதி உணவு, தாய்ப்பால்தான். எப்போதும் அதற்கு ஈடான உணவு ...
குழந்தைக்குத் தேவையான புரதங்கள், கொழுப்புச் சத்து ...
தாய்ப்பால் (Breastfeeding in Tamil) கொடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் அது ...
As more than 120 countries across the globe celebrate World Breastfeeding Week from 1st to 7th August, feeding support for mothers should be a given. Yet, feeding is not easy for women who have to step out of their homes for varied reasons.
Breastmilk plays a vital role in baby's development. This article delivers the benefits and advantages of breastfeeding. குழந்தையின் ...
தாய்ப்பாலின் நன்மைகள் (Benefits of Breastfeeding in Tamil) - தாய்ப்பாலின் ஏராளமான ...
Breast milk is best for your baby, and the benefits of breastfeeding extend well beyond basic nutrition. In addition to containing all the vitamins and nutrients your baby needs in the first six months of life, breast milk is packed with disease-fighting substances that protect your baby from illness. Lets k
World BreastFeeding Week : உலக சுகாதார நிறுவனம் பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு ...
World Breastfeeding day is being celebrated today all over the world and the UN is observing this week as World breastfeeding week. English; ... Subscribe to Oneindia Tamil. Recommended Video. உலக தாய்ப்பால் வாரம்- வீடியோ ...